யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் மரணம்
25 தை 2026 ஞாயிறு 13:24 | பார்வைகள் : 1844
யாழ்ப்பாணம், திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான 49 வயதுடையவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அந்தத் தாய் கழிப்பறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் அவரை தேடிச்சென்று மகன் பார்த்தவேளை மயக்க நிலையில் காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan