சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதிக்கு எதிராக விசாரணை!
25 தை 2026 ஞாயிறு 10:15 | பார்வைகள் : 213
சீன இராணுவத்தின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (CMC) துணைத் தலைவரும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவருமான ஜெனரல் ஜாங் யூக்ஸியா ஊழல் மற்றும் ஒழுக்காற்று குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சீன இராணுவத்தில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகாரமிக்க இடத்தில் ஜெனரல் ஜாங் யூக்ஸியா உள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவான 'பொலிட்பீரோ' (Politburo) உறுப்பினராகவும், நேரடிப் போர் அனுபவம் கொண்ட மிகச்சில தளபதிகளில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.
ஜாங்குடன் இணைந்து, சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் கூட்டுப் பணியாளர் பிரிவின் தலைமை அதிகாரியான லியு ஜென்லி (Liu Zhenli) என்பவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் "சட்டம் மற்றும் ஒழுக்கத்தை கடுமையாக மீறியதாக" (suspected serious violations of discipline and law) சந்தேகிக்கப்படுகிறார்கள்.
சீனாவில் இது பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைக் குறிக்கும் சொல்லாகும்.
சீனா தனது இராணுவத்தை நவீனப்படுத்தி வரும் வேளையில், அதன் மிக மூத்த தளபதிகளே விசாரணைக்குட்படுத்தப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஷி ஜின்பிங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இராணுவத்தில் ஊழலை ஒழிக்கவும் மேற்கொண்டு வரும் அரசியல் களையெடுப்பு நடவடிக்கையின் உச்சகட்டமாக இது பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan