அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - மின்சாரம் துண்டிப்பு மற்றும் விமானங்கள் இரத்து
25 தை 2026 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 237
அமெரிக்காவின் டெக்சாஸ் முதல் நியூயோர்க் வரை பரவியுள்ள 'ஃபெர்ன்' பனிப்புயல் காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுமார் 23 கோடி மக்கள் (அமெரிக்க மக்கள் தொகையில் 40%) இந்தப் பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளனர்.
பனிப்பொழிவு மற்றும் கடும் காற்றினால் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 14,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் முடங்கியுள்ளனர்.
கடும் பனிக்கட்டிகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், டெக்சாஸ் மற்றும் லூசியானா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 1,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, ஜோர்ஜியா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு மத்திய அவசர கால நிதி உதவியை (Federal Disaster Assistance) வழங்க அனுமதி அளித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 21 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே (மைனஸ் டிகிரி) சென்றுள்ளது. பனிப்புயலுடன் சேர்ந்து 'உறைபனி மழை' பெய்வதால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன.
மீட்புப் பணிகளுக்காக 12 மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan