Paristamil Navigation Paristamil advert login

உலகக்கிண்ணத்தில் வெளியேற்றப்பட்ட வங்காளதேச அணி..ஊழல் விசாரணையில் வாரிய இயக்குநர்

 உலகக்கிண்ணத்தில் வெளியேற்றப்பட்ட வங்காளதேச அணி..ஊழல் விசாரணையில் வாரிய இயக்குநர்

25 தை 2026 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 221


வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் மொக்லேசுர் ரஹ்மான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் விளையாட மாட்டோம் என்று வங்காளதேசம் கூறியது. 

மேலும் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வங்காளதேசத்தை ஐசிசி வெளியேற்றியது. பின்னர் ஸ்கொட்லாந்து அணி பங்கேற்கும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒருமைப்பாடு பிரிவு மற்றும் வாரிய இயக்குநர் மெக்லோசுர் ரஹ்மான் (Mokhlesur Rahman) ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். 
அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. முன்னதாக அவர் வாரியத்தின் தணிக்கைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகியதாக வாரிய செய்தித் தொடர்பாளர் கூறியதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.

அக்டோபர் 6ஆம் திகதி அன்று நடைபெற்ற தேர்தல்கள் மூலம் ரஹ்மான் பிசிபி இயக்குநரானார். ஆனால், இம்மாதம் சிக்கலில் சிக்கிய இரண்டாவது பிசிபி இயக்குநர் ரஹ்மான் ஆவார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் நடப்பு சீசனின் BPL-ஐ மையமாகக் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்