Paristamil Navigation Paristamil advert login

தோல்விக்கு இலங்கையை பழிதீர்த்த இங்கிலாந்து அணி! சம்பவம் செய்த ஜோ ரூட்

 தோல்விக்கு இலங்கையை பழிதீர்த்த இங்கிலாந்து அணி! சம்பவம் செய்த ஜோ ரூட்

25 தை 2026 ஞாயிறு 08:36 | பார்வைகள் : 197


கொழும்பில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது. 

முதலில் ஆடிய இலங்கை அணி 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அசலங்கா 45 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 40 ஓட்டங்களும் எடுத்தனர். 

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 46.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஜோ ரூட் 75 ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 42 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 33 ஓட்டங்களும் எடுத்தனர். தனஞ்செய டி சில்வா, வாண்டர்சே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

2 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 75 ஓட்டங்களும் விளாசிய ஜோ ரூட் (Joe Root) ஆட்டநாயகன் விருதுபெற்றார். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்