CAF-இல் இலகுவாக்கப்பட்டுள்ள Rendez-vous எடுக்கும் முறை!!
25 தை 2026 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 2425
தேசிய குடும்ப உதவித் தொகை நிறுவனமான CAF, பொதுமக்கள் உதவிகளை எளிதாக அணுகுவதற்காக, “Prendre rendez-vous” சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Troov RDV என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய இந்த சேவை, தற்போது பிரான்சின் 101 CAF-களின் கீழ் உள்ள சுமார் 1,000 அலுவலகங்களிலும் மற்றும் CAF இணையதளத்திலும் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம், உதவித் தொகைகள் தொடர்பான தகவல்களை பெறுவது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வது மேலும் எளிதாகியுள்ளது.
இந்த புதிய அமைப்பு மூலம், பயனாளர்கள் CAF இணையதளத்தில் உள்ள “Mon Compte” பகுதியில் இருந்து “Prendre rendez-vous”ஜ கிளிக் செய்து முன்பதிவு செய்ய முடியும். தொலைபேசி, காணொளி அழைப்பு அல்லது நேரடியாக அலுவலகத்தில் சந்திப்பு போன்ற தொடர்பு முறைகளைத் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் தொலைபேசி காத்திருப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறைக்கப்படும் என CAF தெரிவித்துள்ளது.
மேலும், CAF அலுவலகங்களில் பழைய தொடுதிரை இயந்திரங்கள் அகற்றப்பட்டு, QR Code அடிப்படையிலான புதிய பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CAF பயனாளர்கள் கைபேசியில் QR Code-ஐ ஸ்கேன் செய்து வருகையை பதிவு செய்யலாம். கைபேசி அல்லது தொழில்நுட்ப வசதி இல்லாதவர்களுக்காக மடிகணினிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை குறைந்த செலவில் செயல்படுவதுடன், அலுவலக வரவேற்பு முறையையும் சேவை தரத்தையும் மேம்படுத்தும் என CAF தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan