Paristamil Navigation Paristamil advert login

கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுக இரண்டாம் கட்ட பணி

கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுக இரண்டாம் கட்ட பணி

25 தை 2026 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 198


கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் அதானி குழுமம் மேற்கொள்கிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்து உள்ளது.

விரிவாக்க பணி இங்கு, தலைநகர் திருவனந்தபுரத்தில், பொதுத் துறை - தனியார் பங்களிப்பின் கீழ், விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை, குஜராத்தைச்   சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் அமைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், துறைமுகத்தின் முதல் முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அதானி குழுமத்தின், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம், இந்த துறைமுகத்தை நிர்வகிக்கிறது. நான்கு கட்டங்களாக துறைமுகத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், விழிஞ்ஞம் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளை, மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று துவக்கி வைத்தார். இந்த பணிகளை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் அதானி குழுமம் மேற்கொள்கிறது.

இதுவரை மொத்தம் 30,000 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இது, கேரளாவில் ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு.

இந்த விரிவாக்கம், விழிஞ்ஞம் துறைமுகத்தை இந்திய துணை கண்டத்திலேயே மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மையமாக மாற்றும்.

தற்போதைய திறனுடன் கூடுதலாக, 41 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளும் வசதியும் சேர்க்கப்படும்.

உகந்த வசதி மேலும், 21 தானியங்கி கப்பல்- கரை கிரேன்கள், 45 தானியங்கி கேன்டிலீவர் ரயில் பொருத்தப்பட்ட கேன்ட்ரி கிரேன்கள், ரயில் கையாளும் தளம், அதிநவீன மின்சாரம் மற்றும் தானியங்கி அமைப்புகள் அமைக்கப்படும்.

தவிர, 69 அடி ஆழத்தில் அலை தடுப்புச்சுவரும் கட்டப்பட உள்ளது. மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள், அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்