மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்
25 தை 2026 ஞாயிறு 06:48 | பார்வைகள் : 236
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சங்கத்தில் வளர்ந்து,
சரித்திரங்கள் பல படைத்து,
சீரிளமை கொண்டு விளங்கும்,
நம் உயிருக்கு நேராம்,
செந்தமிழர் தாயாம்,
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தியாகிகள் திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்று அவர் முழக்கமிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவர்களது திருவுருவச் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan