CPF மூலம் ஓட்டுநர் உரிம பயிற்சி பெறுவதற்கான நிதியுதவி நிறுத்தம்!!
24 தை 2026 சனி 14:29 | பார்வைகள் : 1226
Compte personnel de formation (CPF) மூலம் ஓட்டுநர் உரிம பயற்சி பெறுவதற்கான நிதியுதவி நிறுத்தப்படுவது “ஒரு சமூக வெடிகுண்டு” என ஒன்லைன் ஓட்டுநர் பாடசாலைகள் கூட்டமைப்பின் (FENAA) துணைத் தலைவர் Edouard Rudolf தெரிவித்துள்ளார்.
2019 முதல் B வகை ஓட்டுநர் உரிம பயிற்சி பெற CPF மூலம் அதிகம் நிதியளிக்கப்பட்ட பயிற்சியாக இருந்து வந்தது; 2023ஆம் ஆண்டில் இது CPF மூலம் நிதியளிக்கப்பட்ட பயிற்சிகளில் 23 சதவீதமாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் சுமார் 15 லட்சம் விண்ணப்பதாரர்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் CPF மூலம் தங்களது ஓட்டுநர் பயிற்சிக்கு நிதியளித்துள்ளனர்.
CPF-ஐ அதிகம் பயன்படுத்துபவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், இந்த நிதியுதவி நிறுத்தம் வேலைக்கு செல்ல ஓட்டுநர் உரிமம் தேவைப்படுபவர்களுக்கு சிரமம் ஆகிவிடும் என Edouard Rudolf கூறியுள்ளார். இது சமூக ரீதியாக ஒரு பெரிய பிளவை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2026 பட்ஜெட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த முடிவின் படி, CPF மூலம் ஓட்டுநர் உரிம பயிற்சி பெறுவது இனிமேல் வேலை இழந்தவர்களுக்கு (chômeur) மட்டுமே அனுமதிக்கப்படும். இதை அரசின் முரண்பட்ட கொள்கை என Edouard Rudolf விமர்சித்துள்ளார். மேலும், இந்த நிதியுதவி திடீரென நிறுத்தப்படுவது பல ஓட்டுநர் பாடசாலைகளை பொருளாதார ரீதியாக பாதித்து, சில நிறுவனங்கள் திவாலாவதற்கும் வழிவகுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan