ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் ரத்து - அதிர்ச்சி தகவல்
24 தை 2026 சனி 12:45 | பார்வைகள் : 400
ஸ்ம்ரிதி மந்தனாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஸ்ம்ரிதியின் நண்பர் அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனாவும், பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணத்தனன்று அதிகாலையில், ஸ்ம்ரிதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக உரையாடியதாக சில ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் தொடர்பாக பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ம்ரிதி மந்தனா நீக்கினார்.
பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் துரோகம் செய்ததாலே திருமணம் நின்றதாக பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.
இதனையடுத்து, தங்களது திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும், இனி தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாகவும் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில், ஸ்ம்ரிதியின் நண்பரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான வித்யான்யன் மானே, திருமணம் நின்றதற்கான காரணம் என அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய வித்யான்யன் மானே, நவம்பர் 23 ஆம் திகதி நான் திருமண நிகழ்வில் இருந்தேன். அன்று பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்து சிக்கினார்.
இதனை கண்ட கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை கடுமையாக தாக்கினார்கள். திருமணம் ரத்து செய்யப்பட்டதற்கு இது தான் காரணமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், பலாஷ் குடும்பம் திரைப்படத்திற்காக என்னிடம் ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு, படம் வெளியாக வேண்டுமென்றால் கூடுதல் பணம் வேண்டும், இல்லையென்றால் முதலீடு செய்த பணத்தைத் தரமாட்டோம்என மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பலாஷ் முச்சல், என் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan