U19 உலகக்கிண்ணம் - 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை
24 தை 2026 சனி 12:40 | பார்வைகள் : 344
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான U19 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி Windhoekயில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சமிகா ஹீனதிகலா 14 ஓட்டங்கள் எடுத்தார்.
வில் பைரோம் 5 விக்கெட்டுகளும், பார்டன் மற்றும் சார்லஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 62 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்டீவன் ஹோகன் (Steven Hogan) 28 ஓட்டங்களும், நிதிஷ் சாமுவேல் 19 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி 26ஆம் திகதி நடைபெற உள்ள அடுத்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan