Paristamil Navigation Paristamil advert login

துருக்கியில் வலுவான நிலநடுக்கம் - அச்சத்துடன் வெளியேறிய மக்கள்

 துருக்கியில் வலுவான நிலநடுக்கம்  - அச்சத்துடன் வெளியேறிய மக்கள்

24 தை 2026 சனி 08:10 | பார்வைகள் : 563


மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று 24.01.2026 உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் வலுவான நிலநடுக்கம் ; அச்சத்துடன் வெளியேறிய மக்கள் | Powerful Earthquake In Turkey Felt Major Cities

பூமியின் மேற்பரப்பில் இருந்து 11.04 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புர்சா, இஸ்மிர், யலோவா மற்றும் குட்டாஹ்யா மாகாணங்களிலும் இது வலுவாக உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்