Paristamil Navigation Paristamil advert login

ஆசிய நாடொன்றுக்கு விமான சேவையை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ்!!

ஆசிய நாடொன்றுக்கு விமான சேவையை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ்!!

24 தை 2026 சனி 11:00 | பார்வைகள் : 1720


எயார் பிரான்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக  இந்த முடிவு எட்டப்பட்டதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ்-டுபாய் நகரங்களை இணைக்கும் AF660 மற்றும் AF658  ஆகிய இரு சேவைகளையும் இரத்துச் செய்திருந்தது. அதை தொடர்ந்து இன்று ஜனவரி 24, சனிக்கிழமையும் இரு விமான போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

விமான சேவைகள் மீள இயக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கும் எனவும், சூழ்நிலையை அவதானித்துக்கொண்டிருக்கும் எயார் பிரான்ஸ், ”விமானக் குழுவையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது முழுமையான கட்டாயம்” என தெரிவித்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்