Paristamil Navigation Paristamil advert login

RER B தொடருந்தின் மீது சாகசம் - இளைஞன் படுகாயம்!!

RER B தொடருந்தின் மீது சாகசம் - இளைஞன் படுகாயம்!!

23 தை 2026 வெள்ளி 19:10 | பார்வைகள் : 1507


RER B தொடருந்தின் மீது ஏறி சாகசம் செய்ய முற்பட்ட இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Arcueil  நகரில் உள்ள Laplace நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய இளைஞன் ஒருவன், நேற்று இரவு 8.10 மணி அளவில் ஓடும் தொடருந்தில் ஏற முற்பட்டுள்ளார். பின்னர் அவர் தொடருந்துடன் மோதுண்டு தண்டவாளத்தில் விழுந்து ப்டுகாயமடைந்துள்ளார்.

அவர் உடனடியாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RATP நிறுவனம் குறித்த சிறுவன் மீது வழக்கு தொடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்