பனிப்பொழிவு!
23 தை 2026 வெள்ளி 18:29 | பார்வைகள் : 2247
பனிப்பொழிவு காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கையினை Météo France அறிவித்துள்ளது.
Isère, Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காரணமாக 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை பகல் 11 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் எனவும், 5 தொடக்கம் 10 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாளை சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல், மழை, வெள்ள அனர்த்தங்களும் ஏற்படும் எனவும் Météo France அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan