அமமுக உடன் கூட்டணி அமைத்ததில் சங்கடம், மன வருத்தம் இல்லை: இபிஎஸ்
24 தை 2026 சனி 07:26 | பார்வைகள் : 692
அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் கூட்டணி அமைத்ததில் எந்த வித மன வருத்தம், சங்கடம் இல்லை, என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் இபிஎஸ், தினகரன், அன்புமணி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது இபிஎஸ் கூறியதாவது:
வளர்ச்சி பாதை
தமிழகத்தில் ஒட்டுமொத்த திமுக ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. திமுக தீயசக்தி. தமிழகத்தில் குடும்பஆட்சி தலைவிரித்தாடுகிறது. வாரிசு அரசியல் உள்ளது . இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி . வலிமையான கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்போது மத்தியில் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.அதிமுக கூட்டணி தடுமாறுகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலில் பாஜ இணைந்தது.பிறகு பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. வலிமையாக கூட்டணி அமைத்துள்ள கட்சி தேஜ கூட்டணி தான். கூட்டணிக்கு வரும் சில கட்சிகள் எது என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அந்த கட்சிகள் வரும் போது தெளிவுபடுத்துகிறோம்.
ஜெயலலிதா ஆட்சி
நானும் தினகரனும் தெளிவுபடுத்திவிட்டோம். நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்கிறார்கள். இருந்தது. எப்போது இணைந்தோமோ அத்தனையும் மறந்துவிட்டோம். இனி ஜெயலலிதாவின் பணிகளை தொடர வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. அவரின் நிலைப்பாடு. ஒற்றுமையாக இருந்து செயல்படுகிறோம்.ஊழல் நிறைந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறோம். ஒத்த கட்சிகள் இணைந்து பணியாற்றுகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். கூடுதலாக இருக்குமே தவிர குறையாது.
இந்த ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர். தினமும் போராட்டம் நடக்கிறது. போராட்டம் நடக்காத நாட்கள் இல்லை. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தை போராட்ட பூமியாக, கலவர பூமியாக இந்த ஆட்சி மாற்றி உள்ளது. போதைப்பொருள் விற்காத இல்லாத இடமேஇல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலைகளமாகி மாறி உள்ளது
திமுக கூட்டணி
முதல்கட்டமாக பிரதமர் வந்துபேசிவிட்டுசென்று விட்டார். இன்னும் சில கூட்டங்களில் பேச உள்ளனர். கூட்டணி கட்சிகள் இணைந்து பேச உள்ளோம்.
வைகோ எந்தளவு திமுகவை பற்றி விமர்சனம் செய்தார். எந்தளவு ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்தார். அதை விட வேறு தலைவர் யாரும் பேச மாட்டார்கள். அவ்வளவு பேசிய வைகோ இன்று ஸ்டாலின் உடன் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் அவசர நிலை, மிசா சட்டத்தை கொண்டு வந்தது. மிசா சட்டத்தால் கடுமையாக பாதித்தோம் என திமுக கூறியது. திமுக தலைமை அலுவலகத்தின் மேல் மாடியில் ரெய்டு நடந்த போது கீழே கூட்டணி அமைத்தது. அப்படிப்பட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது நாங்கள் கூட்டணி அமைப்பதில் எந்த வித சங்கடமும் கிடையாது. மன வருத்தம் கிடையாது. ஒரு மித்த கருத்தோடு செயல்படுகிறோம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
குடும்ப பிரச்னை
தினகரன் கூறியதாவது:
2016- 2021 ல் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின், திமுக எதற்காக போராடியது என அனைவருக்கும் தெரியும். தேர்தல் அறிக்கையில் 95 சதவீதம் நிறைவேற்றவில்லை. இதனையும் மக்களிடம் கொண்டு செல்வோம்.
எங்கள் பிரச்னை குடும்ப பிரச்னை. ஒரு தாய் மக்களாக, ஒரு குடும்பமாக, கூட்டு குடும்பமாக இருந்த எங்களுக்குள் பிரச்னை இருந்தது. இது கட்சி பிரச்னை தான். எங்களுக்கு மனஸ்தாபம் இருந்து பிரிந்து இருந்தது உண்மை. எங்களை ஒன்று சேர்க்க 2021ல் அமித்ஷா முயற்சி செய்தார். ஆனால் முடியாமல் போய்விட்டது.
2026 ல் நீங்களும் இபிஎஸ்ம் ஒன்றாக இருந்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டார்கள். எங்களோடு வர வேண்டும் என பிரதமர் மோடி, அமித்ஷா கேட்டார்கள். அவர்களை பார்த்த அன்றைக்கே ஒப்புக் கொண்டு வந்துவிட்டேன். இது நடந்து 2 மாதம் ஆகிறது.உரிய நேரத்தில் கூட்டணியை அறிவித்துள்ளார்கள்.
பங்காளிகள்
இபிஎஸ் ஒப்புதல் அளித்த பிறகு தான் பேசினார். அதன் பிறகு தான் கூட்டணி அமைந்தது. இதில் அச்சுறுத்தலோ, அழுத்தமோ கிடையாது. 2017 ஏப்ரல் மாதம் அண்ணன் தம்பியாக எப்படி இருந்தோமோ அப்படி ஒன்று இணைந்துவிட்டோம். எங்களுக்குள் பிரச்னை இல்லை. பங்காளியாக ஒரு தாய் பிள்ளையாக இருந்த நாங்கள் இணைந்துவிட்டோம்.ஒன்றாக செல்வோம் ஒன்றாக பிரசாரம் செய்வோம். தேவையான இடத்துக்கு ஒன்றாக செய்வோம். அனைவரும் மறந்த பிறகு கிளறினாலும் ஏமாற்றம் தான் கிடைக்கும். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விட மாட்டோம். ஜெயலலிதா ஆட்சி உருவாகும். இவ்வாறு தினகரன் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan