Paristamil Navigation Paristamil advert login

மாயபிம்பம் படம் எப்படி இருக்கு?

மாயபிம்பம் படம் எப்படி இருக்கு?

23 தை 2026 வெள்ளி 15:32 | பார்வைகள் : 195


அறிமுக இயக்குனர் கே.ஜே சுரேந்தர் இயக்கத்தில் புது முகங்கள் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் மாய பிம்பம். இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இப்படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்.

மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ் ஒரு பேருந்தில் பயணிக்கும் போது ஜானகியை பார்த்து காதல் வயப்படுகிறார். ஆனால் அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே ஒரு விபத்து நேர்கிறது. அந்த விபத்தே அவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்கிறது... இருவரும் பழகுகிறார்கள்.

ஆனால் ஜானகி பற்றி சில தகவல்களை அவரது நண்பர்கள் ஆகாஷிடம் சொல்ல அவர் அதிர்ச்சியடைகிறார். சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்.. நண்கர்கள் சொன்னதால் ஜானகியை தனியாக அழைத்து செல்லும்போது அங்கே எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கிறது.. அது என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆகாஷ்.. தவறு செய்து விட்டோமே என வருத்தப்படும்போது மனதில் இடம் பிடிக்கிறார். ஜானகி பக்கத்து வீட்டுப் பெண் போல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  காதல், ஏமாற்றம், சோகம், சந்தோசம் என எல்லாவற்றையும் கண்கள் மூலம் வெளிப்படுத்துவது அழகு.

ஆகாஷின் நண்பர்களாக வரும் ராஜேஷ், அருண்குமார், ஹரி ருத்ரன் ஆகியோர் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் வரும் எல்லா கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக இருக்கிறது. எட்வின் சகா சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். நந்தாவின் இசை நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது.. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். படத்திற்கு முக்கிய பலம் திரைக்கதை.. அதே போல் சில காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம்.

ஒரு சாதாரண காதல் கதையை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அழகியலான கவிதையாக சொல்லி மனதில் இடம் பிடிக்க செய்திருக்கிறார் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர். மாயபிம்பம்ரசிகர்களை கவரும்..

வர்த்தக‌ விளம்பரங்கள்