இலங்கை முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கை - 70000க்கும் மேற்பட்டோர் கைது
23 தை 2026 வெள்ளி 13:58 | பார்வைகள் : 233
'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று (23) பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், தேடுதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், அதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட 304 சோதனைகளில், 367 கிராம் ஹெரோயின், 2 கிலோ 97 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 32 கிலோ 804 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (22) வரை ''முழு நாடுமே ஒன்றாக' நாளாந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 77,105 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக 68 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,582 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 77,824 என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 320 கிலோ 741 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், 1,280 கிலோ 956 கிராம் ஐஸ், 6 கிலோ 816 கிராம் கொக்கெய்ன், 2,341 கிலோ 723 கிராம் கஞ்சா, 5,568,583 கஞ்சா செடிகள், 155 கிலோ 487 கிராம் குஷ், 44 கிலோ 47 கிராம் ஹாஷிஷ் மற்றும் 132,561 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan