Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்திடம் உதவி கோரும் உக்ரைன் ஜனாதிபதி

 சுவிட்சர்லாந்திடம் உதவி கோரும் உக்ரைன் ஜனாதிபதி

23 தை 2026 வெள்ளி 10:20 | பார்வைகள் : 332


டாவோஸ் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி, சுவிட்சர்லாந்திடம் சில உதவிகள் கோரியுள்ளார். 

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியான கய் பார்மலினை சந்தித்துப் பேசினார்.

உக்ரைனுக்கு சில உதவிகள் தேவை என கோரிய அவர், என்னென்ன உதவிகள் தேவை என்னும் பட்டியலை சுவிஸ் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளார்.

அதில், குறிப்பாக, மின்சார தட்டுப்பாட்டால் அவதியுற்றுவரும் உக்ரைன் மக்களுக்கு உதவ ஜெலன்ஸ்கி கோரியுள்ளதாக சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் வெப்பநிலை மைனஸ் இரண்டு டிகிரிக்கும் ஒன்பது டிகிரிக்கும் இடையில் உள்ளது.

சுவிஸ் ஜனாதிபதியும் உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்துப் பேசிக்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்