Paristamil Navigation Paristamil advert login

ஜனவரியில் உங்கள் வழமையான சம்பளம் ஏன் குறையலாம்?

ஜனவரியில் உங்கள் வழமையான சம்பளம் ஏன் குறையலாம்?

23 தை 2026 வெள்ளி 08:00 | பார்வைகள் : 2047


ஜனவரி 2026 முதல் அமலுக்கு வந்த பல கட்டண உயர்வுகளால் பலரின் நிகர சம்பளம் குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நிறுவனங்களின் சுகாதார காப்பீடு (Mutuelle) கட்டணங்கள் சராசரியாக 5–6% உயர்ந்துள்ளதால் மாதத்திற்கு 6 முதல் 10 யூரோ வரை சம்பளத்தில் குறைவு ஏற்படலாம். 

இதன் தாக்கத்தை சரிபார்க்க:

  • உங்கள் சம்பளச்சீட்டில் “Complémentaire santé obligatoire” என்ற வரியைப் பாருங்கள்.
  • “Part/cotisation salarié” என்ற பகுதியில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுங்கள்.
  • அல்லது, நிறுவன Mutuelle 2026 ஒப்பந்தம் எந்த தேதியில் அமுலுக்கு வந்தது என்பதை உங்கள் முதலாளியிடம் கேட்கலாம்.

மேலும், 2025 முடிவில் முடிந்த வரி சரிசெய்தலுக்குப் பிறகு, மூலத்திலேயே பிடித்தம் (Prélèvement à la source) செய்யப்படும் வரி விகிதம் ஜனவரியில் தானாக மறுகணக்கிடப்பட்டு உயர வாய்ப்புள்ளது. அதேபோல், பொதுப் போக்குவரத்து சந்தா கட்டணங்களும் உயர்ந்துள்ளன. 

சில பகுதிகளில், Pass Navigo போன்ற மாதச் சந்தாக்களின் விலை அதிகரித்ததால், முதலாளிகள் 50% செலவை ஏற்றுக்கொண்டாலும், ஊழியர் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கிறது. இதனால், மாத இறுதியில் கிடைக்கும் நிகர சம்பளம் மேலும் குறையக்கூடும். எனவே உங்கள் சம்பளப்பட்டியலை (bulletin de paie) கவனமாக சரிபார்ப்பது அவசியம். சுமார் 3.2 கோடி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்