பாகிஸ்தானின் வணிக வளாக தீ விபத்து....! 61 பேர் பலி
22 தை 2026 வியாழன் 16:59 | பார்வைகள் : 199
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
குறித்த தீவிபத்தானது கடந்த 17-ந்திகதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 31 பேர் பலியாகி இருந்த நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருந்தனர்.
ஒரே கடையில் 30 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan