குப்பை அகற்றும் வாகனத்தால் நேர்ந்த துயரம்!
22 தை 2026 வியாழன் 14:50 | பார்வைகள் : 843
கழிவு அகற்றும் வாகனம் ஒன்றின் சாரதியின் தவறினால் 48 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் நேற்று ஜனவரி 21, புதன்கிழமை காலை விபத்தொன்று இடம்பெற்றது. தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த மகிழுந்து ஒன்றினை கழிவு அகற்றும் வாகனம் மோதித்தள்ளியுள்ளது. இதில் மகிழுந்தில் இருந்த குறித்த 48 வயது நபர் கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கழிவு அகற்றும் வாகனத்தின் சாரதி ‘ஹாண்ட் பிரேக்’ அழுத்தாமல் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளார். வாகனம் மெல்ல உருண்டு முன்னே செல்வதைக் கவனித்த அதன் சாரதி, ஓடிச் சென்று வாகனத்தில் ஏறி, பிரேக் அழுத்துவதற்கு பதிலாக பதட்டத்தில் அக்ஸிலேட்டரை அழுத்தியுள்ளார்.
அதை அடுத்து, வாகனம் எதிரே நின்றிருந்த மகிழுந்தை மோதித்தள்ளியது. சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan