பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் நிலநடுக்கம்
22 தை 2026 வியாழன் 04:54 | பார்வைகள் : 190
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாகாண அவசரநிலை நிர்வாகம், இந்த நிலநடுக்கத்தால் சேதமோ அல்லது காயமடைந்தவர்களோ இருப்பதாக எதிர்பார்க்கப்படவில்லை என கூறியுள்ளது.
ஹைடா குவாய் (Haida Gwaii) தீவுக்கூட்டத்தின் தெற்குக் கடற்கரை முனையில், மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
3.5 முதல் 5.4 அளவிலான நிலநடுக்கங்கள் பொதுவாக உணரப்படலாம்; ஆனால் அவை பெரும்பாலும் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம், க்வீன் சார்லட் தட்டு எல்லை அருகே நிகழ்ந்துள்ளது.
இந்த பகுதி, மிகப்பெரிய நிலநடுக்கங்களையும் சுனாமிகளையும் உருவாக்கும் திறன் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஹைடா குவாயியின் தெற்குப் பகுதியிலிருந்து தென்கிழக்கு அலாஸ்கா வரை பரவியுள்ள இந்த தட்டு எல்லை, கனடாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய இரண்டு நிலநடுக்கங்கள் நிகழ்ந்த இடமாகும்.
1949 ஆம் ஆண்டு 8.1 அளவிலான நிலநடுக்கமும், 2012 ஆம் ஆண்டு 7.8 அளவிலான நிலநடுக்கமும் இதே பகுதியில் பதிவாகியிருந்தன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan