குழந்தைகளிடையே மீண்டும் அதிகரித்து வரும் தொற்றுக்காய்சல்
21 தை 2026 புதன் 22:00 | பார்வைகள் : 1509
பிரான்சில் தொற்றுக்காய்ச்சல் (la grippe) இன்னும் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, குழந்தைகள் மற்றும் இளையோரிடையே மருத்துவ சேவைகளை நாடும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
பெரியவர்களிடையே இது குறைந்துவந்தாலும், குழந்தைகளில் வைரஸ் பரவல் அதிகரிப்பதால் வரும் வாரங்களில் பெரியவர்களையும் பாதிக்கக்கூடும் என்று Santé publique France எச்சரித்துள்ளது. காய்ச்சல் தொடர்பான உயிரிழப்புகள் இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளன; மின்னணு மரணச் சான்றிதழ்களைக் கொண்ட மரணங்களில் 6.5% தொற்றுகாய்ச்சலுடன் தொடர்புடையதாக உள்ளது.
பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பிரெஞ்சு கயானா ஆகியவற்றில் இன்னும் காய்ச்சல் தொற்று நிலவி வருகிறது. அதே நேரத்தில் மயோட் அதிலிருந்து மீண்டுவரும் நிலையில், ரீயூனியன் வழமைக்கு திரும்பியுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan