Paristamil Navigation Paristamil advert login

வயிற்றுப்போக்கு அபாயம்: Picot குழந்தை பாலின் ஆறு தொகுதிகள் திரும்பப் பெறப்படுகிறது!!

வயிற்றுப்போக்கு அபாயம்: Picot குழந்தை பாலின் ஆறு தொகுதிகள் திரும்பப் பெறப்படுகிறது!!

21 தை 2026 புதன் 13:35 | பார்வைகள் : 1428


Lactalis குழுமம் Picot குழந்தை பால் தயாரிப்புகளின் ஆறு தொகுதிகளை, பக்டீரியாவால் உருவாகும் “செரியூலைடு” (céréulide) குழந்தைகளில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்துவதால் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 

இந்த பிரச்சினை, குழந்தை பால் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ARA என்ற ஓமேகா கூறை வழங்கும் ஒரு சர்வதேச விநியோகஸ்தருடன் தொடர்புடையதாக Lactalis குழுமம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் மருந்தகங்களிலும் பெரிய விற்பனை நிலையங்களிலும் விற்கப்பட்டிருந்தன.

முதல் ஆய்வுகள் சரியானவையாக இருந்தாலும், பால் தயாரித்து பயன்படுத்தும் நிலையில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனைகளில் இந்தப் பொருள் கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என Lactalis நிறுவனம் கூறியுள்ளது. 

பிரான்ஸில் பாதிக்கப்பட்டுள்ள ஆறு தொகுதிகள்:

  • Picot Nutrition Quotidienne 1er âge – 400 g, 800 g மற்றும் 850 g 
  • Picot Nutrition Quotidienne 2e âge – 800 g மற்றும் 850 g
  • Picot AR 2e âge – 800g 

இதேவேளை, Nestlé நிறுவனமும் ஜனவரி முதல் Bacillus cereus பக்டீரியா இருக்கக்கூடிய அபாயம் காரணமாக Guigoz மற்றும் Nidal குழந்தை பால் தயாரிப்புகளை திரும்பப் பெற்றுவருகிறது; சில குடும்பங்கள் கவலைக்கிடமான அறிகுறிகளை தெரிவித்துள்ளதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்