Paristamil Navigation Paristamil advert login

பல்கேரியா ஜனாதிபதி ராதேவ் திடீர் இராஜிநாமா

பல்கேரியா ஜனாதிபதி ராதேவ் திடீர் இராஜிநாமா

21 தை 2026 புதன் 07:58 | பார்வைகள் : 208


பல்கேரியா ஜனாதிபதி ராதேவ்  (Radev )பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கேரியாவில் கம்யூனிஸ் ஆட்சி மறைந்து ஜனநாயகம் மலா்ந்த பிறகு, ஒரு ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே விலகுவது இதுவே முதல்முறையாகும்.

ஜனாதிபதி ராதேவ் இராஜிநாமா கடிதம் அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது என்றும், அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதி இலியானா யோடோவா தற்காலிகமாக பொறுப்பேற்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பல்கேரியா, கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமாா் எட்டு முறை பாராளுமன்றத் தோ்தல்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்