தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் !
21 தை 2026 புதன் 13:59 | பார்வைகள் : 149
ஜாதி கட்சி தலைவர்' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தி.மு.க., துணை பொதுச்செயலரும் அக்கட்சி எம்.பி.,யுமான ராஜாவை கண்டித்து, மாவட்ட வாரியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க., துணை பொதுச்செயலரும், நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ராஜா, சமீபத்தில் 'யு டியூப் சேனல்' நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தி.மு.க., கூட்டணி கட்சிகளில் ஒன்றாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஜாதி கட்சி தலைவர் தான்' என பேசியிருந்தார்.
அதற்கு பதிலடியாக, 'திருமாவளவன், தலித்துகளுக்கான தலைவர் மட்டுமல்ல; அனைத்து மக்களுக்கான தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'தி.மு.க., - எம்.பி., ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, மாவட்ட வாரியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜாவை, 'ஆர்.எஸ்.எஸ்., கைக்கூலி' எனவும் விமர்சித்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan