மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அறிவுரை: முதல்வர் ஸ்டாலின்
21 தை 2026 புதன் 10:20 | பார்வைகள் : 606
கூட்டணி கட்சிகளில், நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்கள் தேவையில்லாத கருத்துக்களை பேசி, கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நினைக்கலாம். அந்த சூழ்ச்சிக்கு நாம் யாரும் பலியாகி விடக் கூடாது, என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாக, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க.,வினர் நடத்திய பொங்கல் கொண்டாட்டம், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அரசு சார்பில் வழங்கிய 3,000 ரூபாய், மக்களின் மகிழ்ச்சியை இரு மடங்காக்கி இருக்கிறது.
ஒற்றை இலக்கு
பொங்கல் கொண்டாட்டம் முடிந்து, எல்லோரும் ஓய்வு இல்லாமல், தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும். தி.மு.க., அரசின் திட்டங்களால் 2 கோடி மக்கள் தொடர்ச்சியாக பயனடைகின்றனர்.
அவர்களை, தி.மு.க., வாக்காளர்களாக, உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, மா.செ.,க்களிடம் தான் உள்ளது. நம் சிந்தனை, செயல் எல்லாவற்றிலும், வெற்றி என்ற ஒற்றை இலக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். தேவையில்லாத சிக்கலில் மாட்டினால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
தேர்தல் வருகிறது; நடவடிக்கை எடுக்க மாட்டார்' என யாரும் நினைக்கக்கூடாது. தனி நபர்களை விட கட்சி தான் பெரிது. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்.
களத்தில் மக்கள் குற்றம் குறைகளை சொன்னால், பொறுமையாக பதில் அளிக்க வேண்டும். உங்கள் முகத்தில் தப்பித்தவறி கூட கோபமோ, ஆணவமோ, அதிருப்தியோ வெளிப்படக்கூடாது.
கூட்டணி கட்சிகளில், நம்மை பிடிக்காத சிலர் இருக்கத்தான் செய்வர். அவர்கள் தேவையில்லாத கருத்துக்களை பேசி, கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அந்த சூழ்ச்சிக்கு, நாம் பலியாகி விடக் கூடாது.
சதவீத உழைப்பு கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவற்றை, நான் பார்த்துக் கொள்கிறேன். எந்த தொகுதியில் யார் நின்றாலும், நான் களம் காண்பதாக நினைத்து, 100 சதவீத உழைப்பை கொடுத்து, களப்பணி ஆற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே பா.ஜ., அரசுக்கு எதிராக, உறுதியாக, வலிமையாக இருப்பது நாம்தான் என, எல்லோருக்கும் தெரியும். அதனால், நம்மை வீழ்த்த பல சதித்திட்டங்கள் நடக்கும். அவற்றை உடைத்து, ஒரு வலிமையான இயக்கமாக செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் பேசியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan