Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி:  நயினார் நாகேந்திரன்

21 தை 2026 புதன் 06:41 | பார்வைகள் : 148


தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

டில்லியில் நேற்று  தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

இந்நிலையில் இன்று டில்லியில் நயினார் நாகேந்திரன் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டு மக்களின் நலன் கருதி தேஜ கூட்டணியில்  மீண்டும் அதிமுக இணைந்தது.பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரும் கூட்டணியில் உள்ளனர்.

இன்னும் வருவர். நாளுக்கு நாள் தேஜ கூட்டணிக்கு ஆதரவு பெருகி கொண்டே வருகிறது.

யார் ஆதரவு தந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பிரதமர் மோடி மீதும் மத்திய அரசு மீதும் நம்பிக்கை வைத்து இளைஞர்களும் பெண்களும் ஆதரவு அளிக்கிறார்கள்.

வரும் ஜனவரி 23,  அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்திற்கு வருகை தரவுள்ளார்.  பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்துள்ளபோதும், இம்முறை வருவது முக்கியம் வாய்ந்தது. இளைஞர்களும், பெண்களும் அவரது வருகையை எதிர்பார்க்கிறார்கள். கூட்டத்திற்கு ஐந்தரை லட்சத்திற்கும் மேல் வருவார்கள்.

சட்டசபைத் தேர்தலுக்கான தேஜ கூட்டணி பிரசாரத்தை பிரதமர் மோடி அன்றைய தினம் துவக்கி வைக்கிறார். கூட்டணியில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்பது குறித்த தெளிவான விவரங்கள்  மேடையிலேயே அதிகாரப்பூர்வமாகத் தெரியும். டி.டி.வி. தினகரனின் அமமுக  என்டிஏ கூட்டணியில் இணையுமா என்பது அன்றைய தினம் தெரியும். வரவுள்ள சட்டசபை தேர்தல்களில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு நயினார் நகேந்திரன் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்