Paristamil Navigation Paristamil advert login

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்

20 தை 2026 செவ்வாய் 17:06 | பார்வைகள் : 215


ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க படைகளின் வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது.

கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது.

அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்