Paristamil Navigation Paristamil advert login

l'Urssaf மீது இணையத் தாக்குதல்: 12 மில்லியன் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு !!

l'Urssaf  மீது இணையத் தாக்குதல்: 12 மில்லியன் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு !!

20 தை 2026 செவ்வாய் 15:48 | பார்வைகள் : 1255


சமூக பாதுகாப்பு மற்றும் குடும்ப நல நிதி  அமைப்பான l'Urssaf (L'Union de recouvrement des cotisations de sécurité sociale et d'allocations familiales) நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையதள தாக்குதல் மூலம் பெரும் அளவிலான தரவுகள் கசிவு அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்த சுமார் 12 மில்லியன் ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி, நிறுவனங்களின் SIRET எண் மற்றும் பணியில் சேர்ந்த தேதிகள் போன்ற தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தாக்குதல், l'Urssaf நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு பயனரின் கணக்கின் வழியாக திருடப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், கூட்டாளர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த இணைய பக்கத்தில் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என l'Urssaf விளக்கமளித்துள்ளது.

எனினும், சமூக பாதுகாப்பு எண், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் பாதிக்கப்படவில்லை என நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கணக்கிணை உடனடியாக நிறுத்தப்பட்டதுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தரவு கசிவை பயன்படுத்தி இணைய மோசடிகள்  நடைபெறக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என l'Urssaf எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர், Pajemploi சேவையிலும் தரவு திருட்டு நடந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெறும் இணையதள தாக்குதல்கள் நாட்டின் தகவல் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறி வருவதாக அரசியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்