Paristamil Navigation Paristamil advert login

குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ!

குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ!

20 தை 2026 செவ்வாய் 15:02 | பார்வைகள் : 269


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக வலம் வர தொடங்கினார். இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் அட்லீக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது.

அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் அட்லீ.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்து, அங்கேயும் தான் ஒரு ஹிட் இயக்குநர் என்று நிரூபித்து விட்டார் அட்லீ. இந்த வெற்றிகளுக்கு மத்தியில் தந்தையும் ஆனார் இயக்குநர் அட்லீ. 2014 ஆம் தனது காதலி மற்றும் நடிகையுமான ப்ரியாவை கரம்பிடித்தார் அட்லீ. இந்த தம்பதிக்கு கடந்த 2023ம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் இடம்பெற்றுள்ள டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக தனது மனைவி பிரியாவுடன் சென்று கொண்டாடினார் அட்லீ. இந்த நிலையில் தான் இரண்டாவது குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக அட்லீ தெரிவித்திருக்கிறார்.

தனது வலைதளத்தில் மனைவி பிரியா இரண்டாவது முறையாக கர்ப்பிணியாகி இருப்பதை அறிவித்துள்ள அட்லீ, "எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகையோடு, எங்கள் இல்லம் இன்னும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் மாறப்போகிறது. ஆம்! நாங்கள் மீண்டும் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறோம். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் எங்களுக்குத் தேவை. அன்புடன், அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் குஃபி." என்று பதிவிட்டு குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அட்லீ மற்றும் பிரியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்