கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?
20 தை 2026 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 191
பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்கு மிகவும் பிடித்த உணவு கேரட் என்பது பலருக்கும் தெரியாது.100 கிராம் கேரட்டில் புரோட்டின், கொழுப்பு, தாது பொருட்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, விட்டமின் சி, கரோட்டின் மற்றும் கலோரி எல்லாம் அடங்கியிருக்கிறது.
குறிப்பாக குளிர்காலத்தில் தினமும் உணவில் கேரட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரதச்சத்து, கொழுப்பு நார்ச்சத்து, பாஸ்பரஸ், பீட்டா, கரோட்டின் போன்ற சத்துக்கள் அதில் இருக்கிறது.கேரட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் எல்லோரும் கேரட்டை சாப்பிட வேண்டும். அதே நேரம் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு சாப்பிட வேண்டும்.
கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது அது பல்லுக்கு உறுதியை கொடுக்கும்.. அதோடு உடலுக்கு தேவையான கால்சியத்தையும் கேரட் கொடுக்கும்.. குழந்தைகளின் எடை அதிகரிக்கும். வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உமிழ்நீர் உற்பத்தியை தூண்டும். பாக்டீரியாக்களை வெளியே தள்ள உதவும்.
குளிர்காலத்தில் உடம்பில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவும். அதேபோல் அஜீரணக் கோளாறு, இரைப்பை அல்சர், குடல் நோய்கள், அல்சர், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் கேரட்டில் தீர்வு உண்டு.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan