பரிசில் பாதசாரிகளுக்கு என - புதிய சுரங்கப்பாதை!!
20 தை 2026 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 820
பரிசில் உள்ள Gare de l'Est மற்றும் Gare du Nord நிலையங்களை இணைக்கும் பாதசாரிகள் சுரங்கம் ஒன்று அமைக்கும் பணி மிக வேகமாக இடம்பெற்று வருகிறது.
56 மீற்றர் கொண்ட இந்த சுரங்கம், 600 மீற்றர் இடைவெளியை சுருக்குகிறது. 15 நிமிட நடைபயணத்தை வெறுமனே ஐந்து நிமிடங்களாக குறைக்கிறது. தினமும் 80,000 இற்கும் அதிகமான பயணிகள் இந்த இரு நிலையங்களிடையே பயணிப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதமாக இரு அமையும் எனவும் இல்-து-பிரான்ஸ் பொது போக்குவரத்து சபை அறிவிக்கிறது.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Rue La Fayette வீதிக்கு கீழாக சுரங்கம் தோண்டப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. வீதியின் மேற்பரப்பில் இருந்து 12 மீற்றர் ஆழத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
2027 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, சுரங்கம் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan