இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வருகை....!
20 தை 2026 செவ்வாய் 05:28 | பார்வைகள் : 127
இலங்கைக்கு எதிராக இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் பொருட்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜனவரி 22, 24, 27ஆம் திகதிகளில் நடைபெறும்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜனவரி 30ஆம் திகதியும் பெப்ரவரி 1, 3ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் இரண்டு அணிகளுக்கும் ரி20 உலகக் கிண்ணத்துக்கான ஒத்திகை போட்டியாக அமையவுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan