Paristamil Navigation Paristamil advert login

24வது முறையாக விண்ணில் பாய்ந்த SpaceX ராக்கெட்- 29 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

24வது முறையாக விண்ணில் பாய்ந்த SpaceX ராக்கெட்-  29 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

19 தை 2026 திங்கள் 18:07 | பார்வைகள் : 114


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வலுப்படுத்த மேலும் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஏவுதலானது புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி தளத்திலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ளது.


ஸ்டார்லிங்க் திட்டம் ஆனது, உலகின் ஒவ்வொரு குக்கிராமங்களுக்கு அதிவேகமான இணையதள வசதியை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தற்போது ஏவப்பட்டுள்ள 29 செயற்கைக்கோள்களுடன் சேர்த்து மொத்தம் 9500 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


ஸ்டார்லிங்க் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பால்கன் 9(Falcon 9) முதல் நிலை பூஸ்டர், விண்வெளி பயணச் செலவை குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த பால்கன் 9 செயற்கைக்கோளை நிலை நிறுத்திய பிறகு, மீண்டும் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்குகிறது.  இவ்வாறு இந்த பூஸ்டர் 24 வது முறை விண்ணிற்கு சென்று பாதுகாப்பாக திரும்பியுள்ளது.

மேலும் இந்த பால்கன் 9 முதல் நிலை பூஸ்டர் அடுத்தடுத்த பயணங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்