அதிகாரத்தை பரவலாக்க காங்கிரஸ் விருப்பம்: ராகுல்
20 தை 2026 செவ்வாய் 11:38 | பார்வைகள் : 157
அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்க பாஜ விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் அதனை பரவலாக்க விரும்புகிறது, என அக்கட்சி எம்பி ராகுல் கூறியுள்ளார்.
கொச்சியில் நடந்த காங்கிரஸ் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: பாஜவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என விரும்புகிறது. நாட்டில் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், சில கார்ப்பரேட் அதிபர்கள் மட்டும் செழித்து வளர வேண்டும் என பாஜ விரும்புகிறது. மக்களின் குரல்களை கேட்க அவர்கள் விரும்பவில்லை.
தேசத்தின் சொத்துக்கள் மீது கட்டுப்பாடு செலுத்த முயலும் சில பெரு நிறுவனங்களுக்கு பலனளிக்கும் வகையில், மக்களின் ஜனநாயக குரலை பாஜ தலைமையிலான மத்திய அரசு ஒடுக்குகிறது. கேரள மக்களின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது என 100 சதவீதம் சொல்ல முடியும்.
கேரளாவில் விரைவில் நடக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். அதன் பிறகு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி என்னிடம் எழுகிறது. மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை பிரச்னை உள்ளது. இந்த பிரச்னையை சரி செய்யும் வகையில் தொலை நோக்கு பார்வையை காங்கிரஸ் கூட்டணி வழங்க வேண்டும். கேரள மக்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கும் திறன் இங்குள்ள தலைவர்களுக்கு உள்ளது என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan