இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்; ஐஎம்எப் கணிப்பு
20 தை 2026 செவ்வாய் 10:31 | பார்வைகள் : 612
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025-26 நிதி ஆண்டில் 6.6% ஆக இருக்கும் என முன்பு கணித்திருந்த சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்), அதை தற்போது 7.3% ஆக உயர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் பொருளாதார வளர்ச்சி 2026ம் ஆண்டில் 3.3 சதவீதமாக இருக்கும். 2027ல் இது 3.2 சதவீதமாக குறையும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி2026ல் இது 4.5% ஆகவும், 2027ல் 4% ஆகவும் குறையும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2026ல் 2.4% ஆகவும், 2027-ல் 2% ஆகவும் இருக்கும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025-26 நிதி ஆண்டில் 7.3 சதவீதமாக இருக்கும். இது முந்தைய கணிப்பை விட 0.7 சதவீதம் அதிகமாகும். இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியே இதற்கு காரணம். ஆனால், அடுத்த இரண்டு நிதியாண்டுகளில் இந்த வளர்ச்சி சற்று குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும்.
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது.இந்தியாவின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2% முதல் 6% என்ற இலக்குக்குள் வரும். வர்த்தக பதற்றம் உலக வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு மத்திய வங்கிகளின் சுதந்திரம் மிக முக்கியமானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan