தமிழிசை தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு
20 தை 2026 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 158
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணி அமைத்தல், விருப்ப மனு பெறுதல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
அதேபோல், மக்கள் சந்திப்பு உள்ளிட்டவற்றிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர்.
இவை எல்லாம் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தல் அறிக்கைக்கான பணிகளையும் அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழுக்கள் அமைத்து அதற்கான பணிகளை செய்து வருகின்றன.
இதன் அடுத்தக்கட்டமாக அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வாக்குறுதிகளாக ஐந்து வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் பாஜக தங்களது தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 12 பேர் அடங்கிய குழுவை, தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan