Paristamil Navigation Paristamil advert login

மிக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி

மிக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி

19 தை 2026 திங்கள் 15:18 | பார்வைகள் : 116


231 ஆண்டு கால மோசமான சாதனையை பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட் அணி முறியடித்துள்ளது.

பாகிஸ்தானில் பிரசிடன்ட் டெஸ்ட் கிண்ணம் எனப்படும் முதல் தர கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில், கடந்த ஜனவரி 15 ஆம் திகதி தொடங்கிய போட்டியில், பாகிஸ்தான் டிவி மற்றும் சுய் நார்தர்ன் கியாஸ் பைப்லைன்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற சுய் நார்தர்ன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய பாகிஸ்தான் டிவி அணி, முதல் இன்னிங்ஸில் 66.2 ஓவர்களுக்கு 166 ஓட்டங்கள் எடுத்துஆல் அவுட் ஆனது. 

அதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய சுய் நார்தர்ன் அணி, 67.3 ஓவர்களில் 238 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 

இதனையடுத்து, 2வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் டிவி அணி, 111 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால், 40 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சுய் நார்தர்ன் அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால் சுய் நார்தர்ன் அணி வீரர்கள் வரிசையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, சுய் நார்தர்ன் அணி வெறும் 19.4 ஓவர்களில் வெறும் 37 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
சைபுல்லா பங்கஸ் மட்டும் இரட்டை இலக்க ஓட்டம்(13) எடுத்தார். பாகிஸ்தான் டிவி அணி, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

232 ஆண்டு கால சாதனை முறியடிப்பு மேலும், இந்த போட்டியின் மூலம் 231 ஆண்டு கால மோசமான சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

1794 ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் நடைபெற்ற முதல்தர டெஸ்ட் போட்டியில், மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அணணி ஓல்ட்ஃபீல்ட் அணி நிர்ணயித்த 41 ஓட்டங்களை எடுக்க முடியாமல் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதுவே முதல்தர போட்டியில், குறைந்த ஓட்டங்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியடைந்த அணியாக இருந்தது.

231 ஆண்டுகளுக்கு பிறகு, 40 ஓட்டங்களை சேசிங் முடியாமல், சுய் நார்தர்ன் கியாஸ் பைப்லைன்ஸ் அணி அந்த மோசமான சாதனையை முறியடித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்