சதத்தில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
19 தை 2026 திங்கள் 14:20 | பார்வைகள் : 121
18.01.2026 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி சச்சினை சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ODI மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ODI போட்டியில் இந்தியாவும், 2வது ODI போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்று ODI தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் நேற்று 3வது ODI போட்டி, இந்தோரில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்திருந்தது.
நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல்(137), கிளென் பிலிப்ஸ்(106) ஆகிய இருவரும் சதமடித்தனர்.
338 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 46 ஓவர்களில் 296 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம், 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் ODI தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம், நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்தியா மண்ணில் ODI தொடரை கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது.
மேலும், இந்த போட்டியில் விராட் கோலி, 108 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 124 ஓட்டங்கள் குவித்தார்.
தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்த கோலி, சச்சினின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
அதிக மைதானத்தில் ODI சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் தன்வசம் வைத்திருந்தார். சச்சின் இதுவரை 34 மைதானங்களில் ODI சதம் அடித்துள்ளார்.
நேற்றைய தனது ODI சதத்தை 35வது மைதானத்தில் அடித்த கோலி சச்சினின் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், நியூசிலாந்திற்கு எதிராக நேற்று தனது 10வது சதத்தை அடித்த கோலி, நியூசிலாந்திற்கு எதிராக அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
9 சதத்துடன் ஜாக் காலிஸ், ஜோ ரூட், சச்சின் ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan