Paristamil Navigation Paristamil advert login

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்  பற்றி  தெரியுமா?

19 தை 2026 திங்கள் 14:04 | பார்வைகள் : 887


இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும்  பாரம்பரிய உணவுகளை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது.சாம்பார், கீரை, அரிசி சாதம், ரசம், பொரியல் போன்ற பாரம்பரிய தமிழக உணவுகள் இன்றைய Gen Z இளைஞர்களுக்கு பிடிப்பதில்லை. குறிப்பாக  இப்போதுள்ள இளம் தலைவர்கள் தமிழக பாரம்பரிய உணவுகளை தவிர்த்து விட்டு துரித உணவுகளை நோக்கி படையெடுக்கிறார்கள். அதுவே அவர்களின் விருப்ப உணவாக மாறியிருக்கிறது. எல்லா ஊர்களிலும், சின்ன சின்ன கிராமங்களில் கூட துரித உணவு கடைகள் வந்துவிட்டன. சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், பர்கர், பீட்சா உள்ளிட்ட பல துரித உணவுகளை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

இட்லி தோசை சாப்பிட்டவர்கள் இப்போது எல்லாம் சிக்கன் ரைஸ் சாப்பிட பழகி விட்டார்கள்.ஆனால் இது போன்ற துரித உணவுகளை உண்பதால் உடம்புக்கு பல வகையான கெடுதல் வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சமீபத்தில் கூட உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தினமும் துரித உணவை சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழழந்தார்.

குறிப்பாக வீட்டில் சமைக்கும் உணவுகளை தவிர்த்து விட்டு பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகமாக சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கிறார். துரித உணவை சாப்பிடுவதால் செரிமான அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு குடலில் ஓட்டை விழும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதிலும் தினமும் பீட்சா, பர்கர் ஆகியவற்றை சாப்பிடுபவர்களுக்கு விரைவில் மரணம் நெருங்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பீட்சா, பர்கர், ஃபிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் போது 40 வயதிற்கு மேல் நிறைய பேருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதோடு, 40 வயதுக்கு மேல் உடலில் வரக்கூடிய பிரச்சினைகள் ஜங்க் ஃபுட் உணவை எடுத்துக் கொள்வதால் டீன் ஏஜிலேயே வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.ஃபாஸ்ட் ஃபுட், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பொழுது கடுமையான உடல்நல பிரச்சினை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்