Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல்! - சிறுவன் மருத்துவமனையில்…!

தொடருந்து நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல்! - சிறுவன் மருத்துவமனையில்…!

19 தை 2026 திங்கள் 07:04 | பார்வைகள் : 3040


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஒன்றில் வைத்து இருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10.45 மணி அளவில் இச்சம்பவம் Pyrénées தொடருந்து நிலையத்தில் வைத்து இடம்பெற்றது. 11 ஆம் இலக்க மெற்றோவுக்காக நண்பர் ஒருவரோடு காத்திருந்த 16 வயதுடைய சிறுவனை திடீரென 20 பேர் கொண்ட குழு சுற்றிவளைத்துள்ளது.

குறித்த இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட சில பொருட்களையும் சூறையாடினர். 16 வயதுச் சிறுவன் வாள் வெட்டுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெற்றோ ஒன்றில் ஏறி தப்பி ஓடியுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நிமிடங்களின் பின்னர் 19 ஆம் வட்டாரத்தின் Place des Fêtes பகுதியில் வைத்து தாக்குதலாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்