Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் - சிதைவுகள் கண்டுபிடிப்பு

 இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் -  சிதைவுகள் கண்டுபிடிப்பு

18 தை 2026 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 201


இந்தோனேஷியாவில் காணாமல் போன சிறிய டர்போப்ராப் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதில் பயணம் செய்த 10 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை.

விமானம், யோக்யகார்டா நகரிலிருந்து மகாசார் (South Sulawesi) நோக்கி புறப்பட்டு சென்றபோது, சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்வழி கட்டுப்பாட்டுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
பின்னர், Bantimurung-Bulusaraung தேசிய பூங்கா பகுதியில் உள்ள Mount Bulusaraung மலையில் அந்த விமானம் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாசார் தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் முகம்மது அரிஃப் அன்வார், “விமானத்தின் உடற்பகுதி (fuselage), வால் பகுதி, ஜன்னல்கள் போன்ற பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது எங்கள் முன்னுரிமை, பயணிகள் மற்றும் குழுவினரை உயிருடன் கண்டுபிடிப்பதே” எனக் கூறியுள்ளார்.

தேடுதல் நடவடிக்கையில் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதில் வான்படை, பொலிஸ், மீட்பு குழுக்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தரை குழுக்கள் Maros Regency பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

விமானத்தில் 7 பேர் கொண்ட குழுவினர் மற்றும் 3 அரசு அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். அவர்கள், கடல் வளங்களை கண்காணிக்கும் அதிகாரப்பூர்வ பணியில் இருந்ததாக கடல் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதி மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் சிரமமாக உள்ளன. ATR விமான உற்பத்தியாளர், “இந்த விபத்துக்கான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம்” என அறிவித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்