பார்த்திபன் 24 ஆண்டு கால தனிமைக்கு விடை கொடுக்கிறாரா ?
18 தை 2026 ஞாயிறு 15:11 | பார்வைகள் : 2890
இயக்குனர், நடிகரான பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் 1990-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். 2001-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
சீதா 2010-ல் சதீஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, பிறகு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். ஆனால், பார்த்திபன் கடந்த 24 ஆண்டுகளாகத் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது பார்த்திபன் தனது தனிமை மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசியுள்ளார்.அவரின் இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், மகன் திருமணத்திற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையைத் தொடங்கிவிடுவான். அதன் பிறகு வீட்டில் நான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அப்போது எனக்கென ஒரு துணை தேவை என்பதை உணர்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு வரப்போகும் துணை வெறும் மனைவியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த புரிதலுள்ள தோழியாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது அவசியம் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
"வாழ்க்கைக்குத் துணை என்பது எந்த வயதிலும் தேவைப்படலாம்" என்ற கருத்தை மையப்படுத்தி பேசியுள்ள பார்த்திபனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan