Paristamil Navigation Paristamil advert login

மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

19 தை 2026 திங்கள் 10:05 | பார்வைகள் : 100


வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டளிக்க இருக்கும் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை மதுராந்தகத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக மக்கள் விரோத திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முதல் பிரசார கூட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். தேஜ கூட்டணியில் யார் இணைகிறார்கள் என்பதை 23ம் தேதி மேடையில் நீங்கள் பார்க்கலாம்.

எல்லாத் தலைவர்களும் மேடையில் இடம் பெறுவார்கள். அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்திருப்பதாக சொல்ல முடியாது. ஏற்கனவே, கடந்த தேர்தலில் மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் என இபிஎஸ் கூறியிருந்தார். தற்போது 500 ரூபாய் அதிகரித்து ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதனை ஈ அடிச்சான் காப்பி என்று சொல்ல முடியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையை சொல்லி இருக்கிறார்கள்.  

தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஈ அடிச்சான் காப்பி என்று சொல்வது சரியாக இருக்காது. எந்த அறிக்கை இருந்தாலும் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்குமா என்பது வரும் 23ம் தேதி தெரியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்