Paristamil Navigation Paristamil advert login

மழை வெள்ளம்! - ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

மழை வெள்ளம்! - ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

18 தை 2026 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 1562


மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் தென் மாவட்டங்கள் பலவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Meteo France அறிவித்துள்ளது. Hérault, Aveyron, Aude ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கோர்ஸ் தீவின் இரண்டு மாவட்டங்களுக்கும் (Corse-du-Sud மற்றும் Haute-Corse) என மொத்தமாக ஐந்து மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தென் பகுதியில் உள்ள மேலும் பல மாவட்டங்களுக்கு குறைந்த பட்ச எச்சரிக்கையான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Hérault மாவட்டத்தில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரை மழை பரவலாக பெய்யும் எனவும்,  சில பகுதிகளில் 220 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்