Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வெற்றியாளர் இவரா?

பிக் பாஸ்  வெற்றியாளர்  இவரா?

18 தை 2026 ஞாயிறு 10:48 | பார்வைகள் : 479


விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றுள்ளது. இந்த இறுதி சுற்றில் திவ்யா கணேஷ், அரோரா, சபரி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதற்கிடையே, அவர்களில் யார் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதுப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.  திரைத்துறை பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், நடிகைகள் மற்றும் சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் என கலவையாக இந்த சீசனில் நுழைந்தனர். ஆனால், இந்த சீசன் தொடங்கியது முதல் மக்கள் மத்தியில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மாறாக, இந்த சீசனில் எந்த கன்டென்ட்டும் இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்தன.

இதற்கிடையே தான் வைல்டு கார்டு என்ட்ரி நடந்தது. அதுவும் குறைந்த நாட்களிலேயே வைல்டு கார்ட் போட்டியாளர்களை உள்ளே அனுப்பிய வரலாறும் இந்த சீசனில் தான் அரங்கேறியது. இந்த சீசனுக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் ஆட்டத்தை மாற்றும் வகையில் 4 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே அனுப்பப்பட்டனர்.  அதன்படி, பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்தார்கள். ஆனால், அப்போதும் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல் கூச்சலும் குழப்பமும் ஆகவே நிகழ்ச்சி தொடர்ந்தது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் மட்டுமே கன்டென்ட் கொடுத்து வருவதாகவும், புரோமோக்களில் வருவதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இதனால், இவர்களில் யாரோ ஒருவர் தான் டைட்டிலை வெல்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார்கள். காரணம், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் நடைபெற்ற ஒரு டாஸ்கில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த சாண்ட்ராவை காரில் இருந்து எட்டி உதைத்து கீழே தள்ளியதாக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.  அதுவும் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 2 பேருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இந்த சீசனில் தான்.

இதையடுத்து, 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்றனர். இந்த நிலையில் வினோத் ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார். அதை தொடர்ந்து, அந்த வார எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறினார். கடைசியாக சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா மற்றும் திவ்யா ஆகிய 4 பேர் ஃபைனலிஸ்டாக இருந்தனர்.

ஆனால், வோட்டிங் அடிப்படையில் வினோத் டாப்பில் இருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார். இதை தொடர்ந்து, அரோரா தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், unofficial வோட்டிங் அடிப்படையில் திவ்யா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால் அவர் தான் டைட்டிலை வெல்வார் என்று கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதிப் போட்டிக்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றுள்ளது. அதில், நான்காவது இடத்தை விக்கல்ஸ் விக்ரமும், மூன்றாவது இடத்தை அரோராவும் பிடித்ததாக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இரண்டாவது இடத்தை சபரிநாதனும், டைட்டில் வின்னராக திவ்யா கணேஷும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் பிக் பாஸில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ஒருவர் டைட்டில் வெல்வது இது இரண்டாவது முறையாகும். இவை அனைத்தும் மக்கள் செலுத்திய வாக்குகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்