உயிருக்கு போராடும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் சத்ரான்
18 தை 2026 ஞாயிறு 08:33 | பார்வைகள் : 119
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் சத்ரான் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷபூர் சத்ரான்(shapoor zadran), அந்த அணிக்காக 43 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
38 வயதான அவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டில் அயர்லாந்திற்கு எதிரான T20 போட்டியில் விளையாடினார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஷபூர் சத்ரான், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷபூர் சத்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சமூகவலைத்தளமா மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷபூர் சத்ரானின் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் ஆபத்தான அளவிற்கு குறைந்துள்ளதால், அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நோய், எந்த நிலை என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஷபூர் சத்ரான் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஷபூர் சத்ரான் உடல்நிலை தேறி வர வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan