இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம்: பி.ஐ.எஸ்., தர நிர்ணய அமைப்பு உத்தரவு
18 தை 2026 ஞாயிறு 08:09 | பார்வைகள் : 165
இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம் என அழைக்கப்பட வேண்டும் என்று, இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ்., அறிவித்துள்ளது.
உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
அனுமதி அதிலும், இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டாலும், நகை பிரியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சிறிதும் குறையவில்லை.
ஆபரண தங்கத்திற்கு அடுத்தப்படியாக, வைர நகைகள் மீதும் நம் நாட்டு மக்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. தற்போதைய சூழலில், சந்தையில் செயற்கை வைரங்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன.
எனவே, நுகர்வோர் நலன் கருதி, செயற்கை வைரங்களை பட்டவர்த்தனமாக அடையாளப்படுத்தும் வகையில், இந்திய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ்., அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இனி இயற்கை வைரம் மட்டுமே வைரம் என அழைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தங்கத்திற்கு 916 என்ற ஹால்மார்க் எண் முத்திரை இருப்பது போல, வைரத்திற்கு 'ஐ.எஸ்., 19469:2025' என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.
நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் இந்த தரநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் காணப்படும் முரண்பாடுகளை தவிர்க்கவும், தெளிவற்ற விளக்கங்களை கையாளவும் இந்த தரநிலை கொண்டு வரப்பட்டுள்ளது.
புதி ய விதிகளின் படி, வைரம் என்ற பெயரை, இனி இயற்கை வைரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தவிர, இயற்கை, அசல், உண்மையான, விலைமதிப்பற்ற போன்ற பெயர்களையும் இ யற்கை வைரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த அ னுமதி தரப்பட்டு உள்ளது.
பரிசோதனை பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், தோண்டி எடுக்கப்பட்ட வைரம் போன்ற வரிகளை இனி பயன்படுத்தக் கூடாது.
செயற்கை வைரங்களை பற்றி குறிப்பிடும் போது, பரிசோதனை கூடத்தில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் என்பதை நுகர்வோர் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில், அவற்றை, 'பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரம்' என, தெளிவாக அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan